Monday 29 August 2011

மொழியாத வார்த்தைகள்

மொழியாத வார்த்தைகள்
மௌனமாய் பேச
விழியாலும் விழி ஆளும்
வழி காதலே!
விழியாலும் மொழியாளும்
மொழி காதலே!


இதயத்தில் வரும் மாற்றம்

அது காதலா

இருவர்க்கும் ஏற்பட்ட
பரிமாற்றமா

உணர்வுக்குள் உயிரோட்டம்
என்தாகுமா

கனவுக்குள் கடை போடும்
களவாகுமா

நினைவுக்குள் நடமாடும்
நிஜமாகுமா

இரவுக்கும் பகலுக்கும்
நிறம் மாறுமா

இனிமைக்கு இதன் மேலே
பெரும் மோகமா

தனிமைக்குள் நிறை தேடும்
தவமகுமா

வலிமைக்கு விளைவாகும்
வளமாகுமா

சிறைகளுக்குள் சிலிர்த்தெழுந்த
சிறகாகுமா

கருவுக்குள் உருவாகும்
விஞ்ஞானமா

விழி காண முடியாத
தவிப்பகுமா

மௌனத்தை மொழியாக
வரவேற்குமா

விரதத்தில் தலையான
மதமாகுமா

மனதுக்குள் மனம் போகும்
இனம் தனம்மா

மானுடத்தில் உயர்வான
நிலைதானம்மா

அறம் விளைக்கும் அன்புக்கு
அடிநாதமே

அருளுக்கும் பொருள் தந்த
திருவாகுமே

இறைநிலையும் இதனுள்ளே
இருப்பகுமே

அண்ணைக்கும் அண்ணை இவள்
அது போதுமே.....