Saturday 27 August 2011

தமிழ் தேசிய கூட்டமைப்பு


ஆரம்பத்தில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகள நிறை வேற்றும் வகையில் அரசியல் தீர்வினை கோரி தமிழ் தலைவர்கள் வாதிட்டதோடு சந்தியாக்கிரக போரட்டங்களை நிகழ்த்தியிருந்தார்கள். பெரும்பான்மையினருடன் இனைந்து வாழ்வதில் இணக்கம் காணப்படமுடியாது போகவே தமிழ் தலைவர்களினால் தனித்தமிழ் ஈழ கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை ஆயுதபோரட்டத்தின் மூலமே அடைய முடியும் என்று நம்பிய இளைஞர்கள் பல அமைப்புக்களாக அணிதிரண்டு ஆயுத போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள். இந்தவேளையில் இந்திய அரசின் ஏற்பாட்டில் 1985 ஆம் ஆண்டு பூட்டான் நாட்டின் தலைநகரமான திம்புவில் தமிழ் அமைப்புக்களுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்றன. இந்த பேச்சுக்களில் ஆயுதம் ஏந்திய ஐந்து அமைப்புக்களும் (EPRLF, EROS, LTTE, PLOTE, TELO) தமிழர் விடுதலை கூட்டணியும் கலந்து கொண்டு தமிழ் தரப்பு நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுக்களை மேற்கொண்டு இருந்தன. அந்த கோரிக்கைகள் இலங்கையின் இறையான்மைக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதினால் அதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசு நி¢ராகரித்து இருந்தது.1987 ஆம் ஆண்டு மே மாதம் அரச படையினர் வடமராட்சி பகுதியை கைப்பற்றியதோடு, இந்திய விமானங்கள் சாப்பாட்டு பொதிகளை வீசி இலங்கை அரசிற்கு அழுத்தத்தினை கொடுத்து இலங்கை இந்திய உடன்படிக்கையினை கைச்சாத்திட்டு இருந்தனர். இதுவரையில் அனைத்து அமைப்புக்களும் ஆயுத போராட்டத்தின் மூலம் தனித் தமிழ் ஈழத்தினை வென்றெடுப்பது என்பதினையே தமது இலட்சியங்களாக கொண்டிருந்தார்கள். திம்பு பேச்சுக்களின் போது தமிழ் அமைப்புக்கள் அனைத்துடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்த இந்திய தரப்பு, இலங்கை இரண்டாக பிழவுபடுவதினை நாம் ஒரு போதும் ஆதரிக்கமாட்டோம் என்று கூறியிருந்துடன், அனுமதிக்கவும் மாட்டோம் என்று கூறியிருந்தார்கள். மேலும் இலங்கை இந்திய உடன்படிக்கையின் மூலம் அதனை உறுதிப்படுத்தி இருந்தார்கள். அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு தோற்றம் பெற்றதே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும்.


http://www.facebook.com/tamilnationalalliance