Monday 29 August 2011

தமிழ்

தமிழ் என்ற அமிழ்தில் வாழும்
இனம் எங்கள் வளமும் காணும்
அருள் என்ற அன்பில் வாழும்
மருள் இங்கு முழுதாய் மாயும்
இருள் வென்று ஒளியும் வீசும்
களம் எந்தன் கவியின் தாளம்
தளம் நல்ல யதுகை மோனை
வளம் சந்தம் பலமும் கூடும்
உளம் என்றும் களிப்பில் ஆடும்
சுவை சேரும் சுகமும் யாவும்
பழம் பெருமை நிதமும் புதுமை
அமைந்துள்ள தமிழின் நிலைகள்
அரும் கலைகள் அழகின் வலைகள்
உடல் தேடும் நலமும் காணும்
நோய் போக்கும் வழியும் காட்டும்
இறைஞ் ஞானம் இனிமை கூட்டும்
விஞ்ஞானம் வழியும் காட்டும்
அணுஞ் ஞானம் இங்கே உண்டு
அளவில்லா நுட்பமும் உண்டு
தொழில் மற்றும் நுட்பங்களெல்லாம்
தமிழ் மொழியில் என்றோ கண்டு
பதித்ததெல்லாம் நன்றாய் உண்டு
இதை உரைத்துச் சென்ற முன்னோர்
பல மடங்கு செய்தே உள்ளார்
இதை மறுத்து சென்றால் என்ன
இருப்பதெல்லாம் வீணாய் போகும்
மொழி பயிற்சி நன்றாய் கொண்டால்
அதன் வளர்ச்சி மட்டும் அல்லால்
நிதம் வளர்ச்சி உனக்கும் உண்டு
தொழில் வளர்ச்சி எல்லாம் கண்டு
தமிழ் அயற்சி கொள்வதுமில்லை
தாழ்மையும் எய்துவதில்லை