Wednesday 14 September 2011

இம்மானுவேல்சேகரன் நினைவு தினம்


இம்மானுவேல்சேகரன் நினைவுதினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக புறப்பட்டுசென்ற தமிழக மக்கள்முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேவைத்து போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பரமக்குடியில் ஜான்பாண்டியனின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 6பேர் பலியானார்கள். இதுதவிர மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆங்காங்கே பஸ்களின் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதனால் நெல்லை, தூத்துக் குடி மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது. பதட்டமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் தீவிர ரோந்துப்பணியிலும் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க இன்று சதி நடந்துள்ளது. ரெயில் என்ஜினின் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

சென்னை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை கடந்து சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி பாலம் பகுதியில் காலை சுமார்6.45மணியளவில் வந்தபோது, தண்டவாளத்தின் மேல்பகுதியில் சிமெண்டால் செய்யப்பட்ட சிலிப்பர் கட்டை ஒன்று குறுக்காக கிடந்ததை ரெயில் என்ஜின் டிரைவர் பார்த்துவிட்டார்.

உடனே அவர் ரெயிலின் வேகத்தை குறைத்து நிறுத்த முயன்றார். ரெயிலின் வேகம் குறைந்தபோதிலும் மெதுவாக வந்து, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிப்பர் கட்டையில் பயங்கரமாக மோதி நின்றது. டிரைவரின் சாமர்த்தியத்தால்ரெயில் தடம்புரளாமல் தடுக்கப்பட்டது. இந்த பயங்கர நாசவேலை குறித்து ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு என்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்தார். விசாரணை பின்பு தண்டவாளத்தில் கிடந்த சிலிப்பர்கட்டையை என்ஜின்டிரைவர் சிலரின் உதவியுடன் ஓரமாக தூக்கிபோட்டுவிட்டு ரெயிலை சங்கரன்கோவில் ரெயில்நிலையத்திற்கு கொண்டுவந்தார்.

சுமார் ஒருமணி நேரம் தாமதமாக சங்கரன்கோவில் ரெயில் நிலையத்திற்கு பொதிகை எக்ஸ்பிரஸ் வந்துசேர்ந்தது. தண்டவாளத்தின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த சிலிப்பர்கட்டையின் மீது மோதியதில் என்ஜினின் முன்பகுதி பலத்த சேதமடைந் ததால் அதனை சரிசெய்ய ரெயில் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டது. பின்பு ரெயில்என்ஜினில் ஏற்பட்டிருந்த சேதம் சரிசெய்யப்பட்டு து. நாசவேலை குறித்துரெயில்வே அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.

ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தென்மாவட்டங்களில் கலவரம், கல்வீச்சு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்திருக்கும்நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பதால், ஜான்பாண்டியனின் ஆதரவா ளர்களே இந்த செயலில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நாசவேலையில் ஈடுபட்ட வர்களை தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் சங்கரன் கோவில் மட்டுமின்றி நெல்லை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.