Wednesday 28 September 2011

நவராத்திரி


ஒரு பெண்ணின் கற்பத்தில், சிசு எவ்வாறு தோன்றி, குடியிருந்து, பிள்ளையாகி பேறு பெறுகிறது?

கர்ப்பப்பை  உயிர் உருவாக்கத்துகுரிய  வகையில் வடிவமைக்கப்பட்டது. (பிண்டமாய்க் கருவாகி, கண், மூக்கு,காது என்று உருவாகி, குழந்தை என்ற திருவாகி பூமியில் விழுவதற்கேற்ற சகல வசதிகள் உடன் அமைந்த அற்புத அமைப்பு கருப்பை.)

குழந்தை வளர வளர இடவசதி ஏற்படுத்தி தரும் Elasticity - அது கை, கால் அசைத்து நீந்தி விளையாட வகை செய்யும் திரவச் சுரப்பு வளர்ச்சிக்குத் தேவையான உணவை-சக்தியை ஊட்டும் தொப்புள்கொடி தொடர்பு.. வெளியுலக கெடுதல்கள் உட்புகா வண்ணம் சீல்  செய்யப்பட்ட பனிக்குட மூடுதல்... இப்படிப்பட்ட வசதிகள்  தாயின் கருப்பையில் இருப்பதால் அல்லவா குழந்தை கருவாகி - உருவாகி - திருவாக முடிகிறது.

இந்த ஏற்பாடுகள் அப்படியே பூமியில் இருப்பதைக் கவனியுங்கள். குழந்தையை சீல் வைத்து பாதுகாக்கும்  பனிக்குடம் போல, சூரியனின் புறஊதாக் கதிர்கள் புகாதப்படி பாதுகாக்கும் ஓசோன் வளையம.  கருப்பையில் உருண்டு விளையாட திரவ வசதி தரப்பட்டது போல பூமியில் நீர் சுரப்பு உண்டாக உலக முழுவதும் சூழ்ந்து நிற்கும் கடல்நீர். தண்ணீர் இல்லையேல் தாவரம் இல்லை. எந்த உயிருக்கும் பூமியில் இடம் இல்லை. தொப்புள் கொடி தொடர்பால் சிசுவுக்கு உணவூட்டும் கருப்பை போலவே, தாவர தானியங்கள் விளைத்து  தன்னுள் வளரும் மானுட ஜாதியை ரட்சிக்கும் பூமியின் தாய்மை நிலை. இவற்றை உற்றுக் கவனித்தவர்கள் இந்தப் புவனம் அம்பிகையின் கருப்பை என்பதை உணர்வார்கள்.

இந்த பூமிக்கு புவனம் என்று வட மொழியில் பெயர். புவனத்தின் தலைவி புவனேஸ்வரி. - புவனேசி.  

புவனா என்ற சொல்லில் இருந்து பிறந்ததே பவானி என்கிற திருநாமம்.

அந்தப் பவானியின் தாய்மையைக் கொண்டாடும் தனிவிழாவே நவராத்திரி.

சிவபெருமான் வித்து, அம்பிகை பூமி, ஒரு விதையைத் தன்னுள் வாங்கி, பலநூறு விதைகளாக்கும் மாயாஜாலம் செய்யும் பூமியைப் போல, ஒன்றை ஒன்பதாக்கும் மாயையே பராசக்தி.

மூல வித்தான ஒன்றை தன மாயா சக்தியால்  ஒன்பதாக்கி அதாவது ஒரு சிவனை பல ஜோடி சீவனாக்கி - சிவனை சீவனாக்கும் மகா மாயாவே மகமாயியே அம்பிகை!

ஒன்றை ஒன்பதாக்குவதை விளக்கவே சிவராத்திரி ஒரு நாளும், நவராத்திரி ஒன்பது நாளும் கொண்டாடபடுகிறது