Thursday 15 September 2011

கருத்தடை மாத்திரையால் நினைவாற்றல் கோளாறு!

கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவர்களின் மேல் பெரிய குண்டு ஒன்றை தூக்கிப் போட்டுள்ளனர் விஞ்ஞானிகள்... கருத்தடை மாத்திரைகள் அதிகம் குடித்தல் நினைவாற்றலில் கோளாறு ஏற்படும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கருத்தடைக்கு மாத்திரைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பாக அமெரிக்காவின் இர்வின் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சியில் தெரியவந்த தகவல்கள் பற்றி ஆராய்ச்சியாளர் ஷான் நீல்சன் கூறியதாவது:
கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்தினால் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
ஒரேயடியாக எல்லாம் மறந்துபோய்விடும் என்று பயப்பட தேவையில்லை. தகவல்களை நினைவு வைப்பதில் சில கோளாறுகள் ஏற்படலாம். கருத்தடை மாத்திரையை தொடர்ந்து பயன்படுத்திய பெண்களின் பட்டியல் மற்றும் மருத்துவக்குறிப்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவதால் பெண்களின் உடலில் அனைத்து சுரப்பிகளிலும், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்ட்ரான் சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பிரசவத்துக்கு பிறகு, பல பெண்கள் சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
டென்ஷன், பதற்றம் அடைகின்றனர். கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவதுதான் பாதிப்புக்கு காரணமாகிறது. குறுகிய காலத்துக்கு பயன்படுத்திவிட்டு நிறுத்திவிடுவது நல்லது. கருத்தடை மாத்திரைகளை இனி பெண்கள் பார்த்து பயன்படுத்துவது நல்லது...