Saturday 17 September 2011

உடற்பயிற்சியை விட சொக்லேட் சிறந்ததாம்- அதிர்ச்சியான ஆய்வு முடிவு





சொக்கலேட்டும் உடற்பயிற்சி போல நல்லதே என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். என்ன ஆச்சரியாமாக இருக்கின்றதா? அறிவியல் உண்மையும் இதுவே.

இந்த ஆய்வில் சொக்கலேற்றில் காணப்படும் mitochondria என்ற மூலப்பொருளில் தசைநார்களின் செயற்பாட்டைத் தூண்டக்கூடிய தன்மை உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது அதிகளவில் காணப்பட்டால் அதிக சக்தியையும் உற்பத்தியாக்கும் என ஆய்வாரள்கள் தெரிவித்துள்ளனர்.

ஓடுதல் மற்றும் சைக்கிளோடுதல் போன்ற உடற்பயிற்சிகளின் போது அதிகரிக்கப்படும் மூலப்பொருளும் இதுவாகத் தான் இருக்கிறது.

15 நாட்களிற்கு நாளாந்தம் இருமுறை கொக்கோவிலிருந்து எடுக்கப்பட்ட இந்த மூலப்பொருள் எலிகளிற்குக் கொடுக்கப்பட்டுப் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது.

இதேவேளை சிலவற்றை ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி இயந்திரத்தில் விட்டுப்பார்த்துள்ளனர்.

இதன்மூலம் இரண்டிலும் பெறப்பட்ட சக்திவகைகளும் ஒத்தவையாகவே காணப்பட்டன.

என்ன யோசிக்கிறிர்கள் பயம் இல்லாமல் சொக்கலேட் சாப்பிட ஆரம்பியுங்கள்.