Wednesday 21 September 2011

வாழ்வை பசுமையாக்கும் பச்சைக் கீரைகள்


கீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு என்பதனை நம்மால் உணர முடிகிறது. கீரை வகைகளில் எந்த சத்துக்களையும் இல்லையென்றால் அது மிகையாகாது. அத்தகைய கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உண்டாகும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!

*
கீரைகளை உண்பதன் மூலம் உடல் பருமன் கட்டுக்கோப்பாக இருக்கிறது. புற்றுநோய், இதய நோய், போன்ற கடுமையான நோய்கள் வருவதனை தடுக்கிறது. கொழுப்பை குறைப்பதிலும், செரிமானத்தை கூட்டுவதிலும் கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது.

*
சர்க்கரை நோயாளிகள் கீரைகளை உண்பதனால் அவர்களின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. சரியான விகிதத்தில் கீரைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வைட்டமின் 'கே' யின் அளவு உடலில் அதிகரிக்கறது.