Saturday 29 October 2011

பேஸ்புக் பாவனையாளர்களே உங்களிற்கு விரைவில் ஆபத்து காத்திருக்கிறது!!



சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் எத்தனையோ நன்மைகள் இருந்தாலும், சில எதிர்மறையான விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

அடுத்தவர்களின் கணக்குகளில் அத்துமீறி நுழைந்து, அந்த கணக்கிற்குரியவரின் தகவல்களை அழித்து அவர்பற்றிய தவறான கருத்துக்களை பரப்பும் நடவடிக்கை சில கயவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேஸ்புக் இப்போது பாதுகாப்பு வழிகளை இறுக்கிவிட்டாலும், இவ்வாறு திருட்டுத்தனமாக அடுத்தவர் கணக்கில் நுழைவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

இப்போது அடுத்த அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதாவது நாள் ஒன்றிற்கு சராசரியாக 600,000 திருட்டுத்தனமான நுழைவு முயற்சிகள் நடக்கின்றனவாம்.

அதுவும் சரியான பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்தே நுழைகிறார்களாம். ஆனால் பலர் தமது கணக்குகளிற்கு verification கொடுத்து வைத்திருப்பதால் கணக்கில் உள்நுழையமுடியாமல் வெளியேறியிருக்கிறார்கள். இந்த 600,000 என்ற கணக்கில் verification கொடுக்காமல் ஹக் செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை உள்ளடக்கப்படவில்லை

ஆகவே எமது கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டியது எமது பொறுப்பு.

எப்படி கணக்கிற்கு verification கொடுப்பது?

முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை திறவுங்கள்.  பின்னர் Account Setting இற்குள் நுழையுங்கள்

அதன் பின்னர் வரும் விண்டோவில் Security – Log in Approval என்பதை தெரிவு செய்யுங்கள். பின்னர் Setup Now என்பதை தெரிவு செய்யுங்கள்.

இப்போது உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும். இலக்கத்தை கொடுத்தபின், நீங்கள் கொடுத்த இலக்கத்துக்கு ஓர் இரகசிய குறியீட்டை அனுப்பிவைக்கும். அந்த குறியீட்டை கொடுத்ததும் சேமிக்கப்பட்டுவிடும்.

அவ்வளவுதான். இனி நீங்கள் உங்களது பயனர்பெயர், கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுழையும்போது உங்கள் கைத்தொலைபேசிக்கு ஒரு தற்காலிக குறியீட்டு எண்ணை அனுப்பிவைக்கும். அதை உள்ளிட்டால்தான் கணக்கினுள் நுழைய முடியும். தொடர்ந்து பாவிக்கும் கணினியாக இருந்தால் இரகசிய குறியீட்டை கொடுக்கும்போது Save Device என்பதை தெரிவுசெய்துவிட்டால் அடிக்கடி கொடுக்கத்தேவையில்லை