Thursday 13 October 2011

Election



ஓட்டுக்கு காசு வாங்குகிறார்கள். இலவசத்துக்கு முட்டி மோதுகிறார்கள். ஈழப் பிரச்சினை உச்சத்தில் இருக்கும் போது வைகோவைத் தோற்கடிக்கிரார்கள்.

வடிவேலுவில் இருந்து குண்டு ஆர்த்தி வரை யார் வந்தாலும் கூட்டம் காட்டுகிறார்கள். கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கி, வாக்குகளை மாத்திக் குத்துகிறார்கள்.

அன்பே சிவத்தையும் ஆரண்ய காண்டத்தையும் காலி பண்ணுகிறார்கள். 'திருப்பாச்சி'யை ஹிட்டாக்குகிறார்கள். அதே டெம்போவில் 'திருப்பதி' எடுத்தால், மொட்டை அடிக்கிறார்கள்.

ஈழப் பிரச்சினைக்கு 'உச்சு' கொட்டிக்கொண்டே இ.பி.எல். பார்க்கிறார்கள். அண்ணா ஹசாரே போராட்டத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு, ஆர்.டி.ஓ ஆபீசில் லஞ்சம் கொடுக்கிறார்கள்.

குழந்தையை ப்ரீ.கே.ஜி சேர்க்க ஒரு லட்சம் டொனேசன் கொடுக்கிறார்கள். உணவகங்களில் மேஜை துடைக்கும் சிறார்களைத் திட்டுகிறார்கள். விஜய்க்கு எதிராக எஸ்.எம்.எஸ்.இயக்கம் கட்டுகிறார்கள். 'மக்கள் இயக்கம்' மாநாடு போட்டால், ரவுண்டு கட்டுவார்கள்.

மதுக்கடைகளிலும் கூட்டம். தியான மையங்களிலும் கூட்டம். துணிக்கடை, நகைக்கடை எங்கெங்கும் கூட்டம். ஆனால் எப்போது யாரைக் கேட்டாலும் "ஒரே பணக் கஷ்டம் பாஸ்" என்கிறார்கள்.

நேர்மை, நியாயம், கோபம், அன்பு, பேசும் எழுத்துக்கும் சினிமாவுக்கும் பேச்சுக்கும் கொந்தளிக்கிறார்கள், அழுகிறார்கள். எதிர் பிளாட்டில் நடக்கும் வெட்டு-குத்தை மொபைல் பேசியபடி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தெருவில் ஒரு சத்தம் கேட்டால், கதவைச் சாத்தி கொள்கிறார்கள்.

திருட்டு வி.சி.டி. பார்க்கிறார்கள்.

யாருக்கும் எதுவும் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் சேர்த்த காசை மருத்துவமனைக்கு கொண்டு போய் அழுகிறார்கள். சமூகத்தின் பெரும் அவலங்களையும் அபத்தங்களையும் நொடியில் கடந்து சென்று விடுகிறார்கள்!