Wednesday 28 December 2011

மரங்கள் பூமிக்கு வரங்கள்..!


மரங்கள் நமக்கு  தராதது என்று என்ன இருக்கிறது..?
மரங்களுக்காக நாம் என்ன கொடுத்து இருக்கிறோம்..?
கருவறை முதல் கல்லறை வரை மரங்கள் தான் சுமக்கின்றன.
ஆணி அடித்தாலும் சரி, தொட்டில் கட்டினாலும் சரி
மரங்கள் தோகையைத் தான் விரிக்கின்றன.
இடியானாலும், மின்னலானாலும், மழையானாலும், வெயிலானாலும், மனிதனுக்கு  பொறுமையை கற்றுத்தருகின்றன.
மனிதன் கல்லை எறிந்தாலும், மரங்கள் மனிதனுக்கு  மலர்களையே  உதிர்க்கின்றன.
மாநாட்டுக்குள் எந்த மரங்களும்  மார்தட்டிக்கொள்வது இல்லை தான்தான் உயர்ந்த ஜாதி என்று..!
எந்த மரமும் அடுத்த மரத்துக்கு  எதிரியாய்  இருந்தது இல்லை..!
மனிதனிடம்  எத்தனை  மிருகங்கள்..!
மரங்களிடம்  மரங்கள் மட்டுமே இருக்கின்றன.
மனிதா! கொஞ்சம் கவனித்தாயா நீ மரங்களை வெட்டும் போதுகூட கிளைகள் உனக்கு சாமரம் வீசுவதை..!