Tuesday 13 December 2011

கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி . . .

சென்னையில் ஆபாச நடன கிளப்புகள் பெருகி வருகின்றன. கலாச்சார நடனம் என்ற பெயரில் அனுமதி வாங்கி இந்த கிளப்புகளை நடத்துகி றார்கள். சிந்தாதிரிப்பேட்டையிலும், அண்ணாசா லையில் உள்ள சாந்தி தியேட்டர் அருகிலும், ராய ப்பேட்டையிலும் நடக்கும் இந்த கிளப்புகளில் கல் லூரி மாணவிகளை ஆபாச நடனம் ஆட வைப்பதாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவி யும் மனித உரிமைகள் கழக சர்வ தேச அமைப்பின் மகளிர் அணி தலைவியுமான கல்பனா கண்டித்து ள்ளார். 
இந்த கிளப்புகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நடன நிக ழ்ச்சி நடத்துகின்றனர். இதற்கு ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக் கிறார்கள். அதற்கு ரசீது கொடுப் பது இல்லை. மாடியில் நடக்கும் இந்த கிளப்புகளின் அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடைகள் உள் ளன. அங் கிருந்து மது வாங்கி குளி ர்பானத்தில் கலந்து நடன நிகழ்ச் சியை பார் ப்போருக்கு வினியோ கிக்கின்றனர். அதற்கு தனியாக பண ம் வாங்கு கிறார்கள். 
கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி அழைத்து வந்து ஆபாச நடனம் ஆட வைக்கின்றனர். 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளையும் ஆட வை க்கிறார்கள். அவர்களுக்கு போதையி ல் இருக்கும் வாடிக்கையாளர்கள் கை களை தொட்டு டிப்ஸ் என்ற பெய ரில் பணத்தை அள்ளி கொடுக்கின்றனர். அந்த பணத்தையும் கிளப் நடத்துப வர்களே பிடுங்கி கொள்கிறார்கள். 
இந்த பெண்களிடம் மொபைல் நம்பர் களை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் அவர்க ளின் எதிர்காலம் தடம் புரளும் பரிதா ப நிலைமை ஏற்படுகிறது. கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி இளம் பெண் கள் வாழ்க்கைக்கு வேட்டு வை க்கும் இந்த நடன கிளப்புகள் மீது போலீ சார் நடவடிக்கை எடுக்க வே ண்டும் என்று கல்பனா வெளியி ட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள் ளார்.
ஆபாச நடன கிளப்புகளை மூட க்கோரி அவற்றின் முன்னால் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த ப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீ து பெண்கள் வன் கொடுமை சட் டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை யில் அவர் கூறியுள்ளார்.