Saturday 31 December 2011

“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் – வீடியோ

1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சந்திரலேகா. எஸ். எஸ். வாசன், ஜெமினி தயாரித்து எஸ். எஸ். வாசன் இயக்கி வெளிவந்த இத்திரைப் படத்தில் எம்.ஆர்.ராதா, டி.ஆர். ராஜ குமாரி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கிட்டு, நைனா, கொத்த மங்கலம் சுப்பு, ரஞ்சன், எல். நாராயணராவ், வேலாயுதம், சுந்தரி பாய் மற் றும் பலரும் நடித்துள்ளனர். கேஜே. மகா தேவன் கதை எழுதி, எஸ். ராஜேஸ்வர ராவ், இசையமைத் துள்ளார்.
இதன் சிறப்பு
இத்திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பிரம்மாண்ட நடனம், வெறும் 6 நிமிடங்கள் 11 விநாடிகளே இடம்பெற்றுள்ள‍து.
அந்தப் புகழ் பெற்ற முரசு நடனத்தை நடத்த வேண்டும் என்று சந்திரலேகா சசாங்கனைக் கேடக, பிரம்மாண்ட முரசு நடனம்!  முரசுகளிலிருந்து (Helen of Troy?) வீரர்கள் வந்து, சண்டை நடந்து, இறுதியில் வில்லனை கதாநாயகன் வெல்வது போல் அமைத்து ள்ளார்கள்!
இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு, பல நூறு நடனக் கலைஞர்களின் அற்புத திறமையினாலும் சிறப்பு பெற்ற‍ சந்திர லேகா திரைப்படத்தில் இடம்பெற்ற‍ அந்த அற்புத நடனத்தை நீங்களும் கண்டு களியுங்கள். அந்த முரசு நடனம் அனைவராலும் மறக்க முடியாதது -