Wednesday 14 March 2012

நோய் எதிர்ப்பு சக்தி தரும் முருங்கைக் கீரை


முருங்கைக் கீரையில் கால்ஷியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளன. கண்ணுக்கு மிகவும் நல்லது. மலச் சிக்கலைத் தீர்க்கும். பொட்டாஷியம், தாமிரம், மெக்னீஷியம், குரோமியம், துத்தநாகம், குளோரைடு ஆகிய தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும்.

முருங்கைக் கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன... வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்ணுக்கு ஒளியூட்டக்கூடியது முருங்கைக்கீரை...