Thursday 15 March 2012

காதல் என்றால் என்ன ?


ஒரு பெண்ணோ ,ஒரு ஆணோ,அல்லது ஒரு பொருளோ .இதன் மீது நம் பார்வை செல்லுகிறது.அதன் மீது பற்று என்னும் அவா உண்டாகிறது,பின் அதை நேசிக்க வேண்டும் என்ற அன்பு உண்டாகிறது,அதன் பின் அதை அனுபவிக்க வேண்டும் என்ற ,ஆசை ஏற்ப்படுகிறது,அதன் பின் அடைந்தே தீரவேண்டும் என்ற காமம் என்னும் உணர்ச்சி மேலிடுகிறது,அதன் பின் அடைந்து விட்டோம் என்ற வெகுளி உண்டாகிறது.மீண்டும் அதன் மீதே மயக்கம் உண்டாகிறது. மயக்கத்தில் ஆழ்ந்து வாழ்க்கை வீணாகிக் கொண்டு இருக்கிறது. இதற்கு காதல் என்று சொல்லப்படுகிறது காமத்திற்கு பேர் காதல் அல்ல ,காதல் பின் மோதலில் ஏற்ப்பட்டு வாழ்க்கை அழிந்து விடுகிறது. அவா ,அன்பு ,மட்டுமே இருந்தால் அதற்குப் பெயர் காதல் ;--,காமம் என்னும் போதை வந்துவிட்டால் படுகுழியில் தள்ளிவிடும் .காதல் ,காமம்,வெகுளி, மயக்கம் எல்லாம் திருமணமாகி மனைவி இடம் செலுத்த வேண்டும் .இதை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் அப்போது இல்லறம் நல்ல அறமாக இருக்கும் மலர்போல் வாழ்க்கை மலரும் .