Tuesday 13 March 2012

முனியாண்டி விலாஸ் ஜவுளி மாளிகை


முனியாண்டி விலாஸ் ஜவுளி மாளிகை
 (diskey-வாடிக்கையாளர்கள்==கிடா,,நாங்க வெட்ட ரெடிதான், வாங்க எல்லோரும் வாங்க ) எங்களுடைய புதிய ஜவுளி மாளிகையின் சிறப்பு அம்சங்கள் 1.மனைவியை அழைத்து வரும் கணவர்கள் தங்கி ஓய்வு எடுக்க ஏசி மற்றும் பாத்ரூம் வசதியுடன் ஓய்வு அறை (diskey-பாவம் எவ்ளோ நேரம் நின்னுகிட்டே இருப்பாங்க) 2.எங்களிடம் எடுக்கும் பெரியவர்களுக்கான உடைகள் ஒருமுறை துவைத்தாலே போதும் சிறியவர்களுக்கு சரியாக பொருந்திவிடும் (diskey-துவைச்சாதான் துணி சுருங்கிடுமே எப்டிதான் சமாளிக்கிறது) 3.ரூபாய்5000 மதிப்புள்ள திருமண பட்டு புடவைகள் தள்ளுபடி விலையில் ரூபாய் 10000க்கு வழங்கபடும் (diskey-போட்ட காச நாங்க எப்டிதான் எடுக்கிறது) 4.எங்களிடம் வாங்கும் புடவைகளுக்கு ஏசியன் பெயிண்டின் 1 வருட உத்திரவாதம் (diskey-இவங்க பெயர வச்சிதானே நாங்க தப்பிக்க முடியும்) 5.எங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏசியன் பெயிண்டின் வாடிக்கையாளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் (diskey-சும்மா போனால் இவங்க துணிகளுக்கு சர்விஸ் பண்ணமாட்டாங்கல்லா) 6.எங்களிடம் திருமண புடவை எடுக்கும் மாப்பிள்ளைகள் திரும்ப திரும்ப எங்களிடமே திருமண புடவை எடுக்கும் அளவுக்கு கைராசியான நிருவனம் (diskey-அந்த மாப்பிள்ளை எத்தனை திருமணம் பண்ணினாலும் கவலை இல்லை,எங்க கைராசி மணமகனுக்குதான்) 7.எங்கள் கடையில் திருடர்கள் தொல்லை இனி இல்லை,பாத்ரூம் ட்ரையல் ரூம் என அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தபட்டுள்ளது (diskey-நாங்கதான் சிடி போட்டு வித்துருவோமே எங்களை விட பெரிய திருடன்,யாருங்க????) 8.இன்றைய இளைஞர்கள் பெண்களிடம் விரும்பும் உடையான நமீதா உடை மிகமிக குறைந்த விலையில் ரூபாய் 5000 க்கு வழங்கபடும் (diskey-இரண்டு கர்ச்சிஃப் விலை இதைவிட குறைவா எந்த கடையில் கிடைக்கும்) 9.தினமும் ஒரு வாடிக்கையாளர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க பட்டு அவருக்கு சூர்யா நடத்தும் ஒரு கோடி நிகழ்ச்சியில் வெல்வதற்கான டிப்ஸ் புக் இலவசம் (diskey-இந்த புக் இல்லாமலே சிறுவர்கள் கூட ஒரு கோடி வெல்லலாம் என்பதே இந்த புக்ல உள்ள முக்கிய டிப்ஸ்)