Friday 11 May 2012

கடவுளை அடைய மூன்று வழிகள்

கடவுளை அடைய மூன்று வழிகள்

* மனம், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர் போன்றது. அதன் ஒவ்வொரு இதழும் உலகமாயைகளுக்கு ஆசைப்பட்டு செல்ல விரும்பும். ஆனால், நீங்கள்தான் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நல்ல மனம்கூடவீணாகப்போய் விடும். மனதை கட்டுப்படுத்தி இருப்பவர்களை, வெளியில் ஏற்படும்எத்தகைய துன்பங்களும் பாதிக்காது.

* கடவுளை அடையவேண்டும் என விரும்புபவர்கள் அதற்காக சிரத்தையான செயல்களைசெய்ய வேண்டும் என்பதில்லை. எளிதாக மூன்று வழிகளை மட்டும் பின்பற்றினால்போதும்.

1. இதயத்தை அன்பிலும்,
2. செயல்களை நேர்மையிலும்,
3. உணர்ச்சிகளை கருணையிலும் நனைத்துவிடுங்கள்.

இந்த மூன்றையும் சரியாகச் செய்தாலே, கடவுளை வெகு சீக்கிரத்தில் அடைந்து விடலாம்.



* இரும்புத்துண்டை நீரில் போட்டால் மூழ்கிவிடும். ஆனால், அதே இரும்பினை இலகுவாக்கி சிறிய பாத்திரமாக செய்து நீரில் விட்டால் மிதக்கும்.இதைப் போலவே மனதையும் இலகுவாக மாற்றிக்கொண்டால் உலக ஆசை என்ற மாயையில்மூழ்காமல், அதன் மீது பற்றில்லாமல் மிதந்து கொண்டிருக்கும்.


* மனதில் எப்போதும் இறைவனை மட்டுமே நினைத்துக் கொண்டிருங்கள். அவரது நாமத்தையே உச்சரியுங்கள். இறைசெயல் அல்லாத வேறு செயல்களில் ஆர்வம் காட்டாதீர்கள் . இப்படிப்பட்டவர்களின் மனம், பூக்களில் இருந்து தேனை மட்டுமே எடுத்துக்கொள்ளும் தேனீக்கு சமமானதாக இருக்கும்.