Monday 24 December 2012

சச்சின் ஒரு இந்திய கிரிக்கெட் சகாப்த்தம்....


சச்சின் ஒரு இந்திய கிரிக்கெட் சகாப்த்தம்....
1.ஒரு நாள் கிரிக்கெட்டில் எப்படி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு கார்டன் கிரீனிஜ்டும், டெஸ்மான்ட் ஹெய்ன்ஸும் ஒரு கால...த்தில் ரன் மெஷின்களாக இருந்தார்களோ அதேபோல இந்திய அணிக்கு சச்சினும், கங்குலியும் ரன்களை வாரிக் குவித்த சாதனையாளர்களாக உள்ளனர்.

2.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும் பட்டையை கிளப்பியுள்ளார்.

3.
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் மொத்தம் 16 முறை தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார். இது ஒரு உலக சாதனையாகும்.

4.
இதேபோல 62 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று உலக சாதனை படைத்துள்ளார் சச்சின்தான். எந்த ஒரு வீரரும் இத்தனை முறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5.
இதில் 8 முறை இறுதிப் போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். உலககக் கோப்பைப் போட்டிகளில் 9 முறை வென்றுள்ளார். இந்தியா தோற்ற 6 போட்டிகளிலும் சச்சினுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது.

6.1998-
ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 3 சதமும் ஒருநாள் போட்டிகளில் 9 சதமும் அடித்து ஒரே ஆண்டில் 12 சதங்களை அடித்து வெளுத்தவர் டெண்டுல்கர்.

7.
ஒருநாள் போட்டிகளில் சச்சின் 154 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். சச்சின் வீசிய பந்துகளின் எண்ணிக்கை
8.ஒருநாள் போட்டிகளில் சச்சின் பிடித்த கேட்சுகள் எண்ணிக்கை 140!.

9.
ஒருநாள் போட்டிகளில் சச்சின் மொத்தம் 49 முறை சதமடித்திருக்கிறார். இது உலக சாதனையாகும். அதேபோல் 96 முறை அரை சதம் அடித்திருக்கிறார்.

10.
உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றது மிக பெரிய சிறப்பு.

ஓய்வுக்கு பிறகு அவர் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்.