Thursday 27 December 2012

திருவாதிரை விரதம்:


இந்தியா 27 /12 /2012 இன்று இரவு மணி 3:30  முதல் நாளை இரவு 5: 15  வரை திருவாதிரை நட்சத்திரம் இந்த நாளில் இந்த விரதம் பூஜை செய்வது உத்தமம்.

மலேசிய வாழ் தமிழ் மக்கள் நாளை முழுவதும் இந்த திருவாதிரை நடசத்திரம் இருப்பதால் நாளை இந்த விரதம் அனுசரிக்கலம்.

சிவமகாபுராணத்துல சொல்ல பட்டிருக்கும் மிக சிறப்பான விரதம் இந்த திருவாதிரை விரதம் . ஈஸ்வரன் , நடராஜராக காட்சி தந்து அருள கூடிய நாள், மார்கழி மாசத்துல வருகிற திருவாதிரை நட்சத்திர தினம். அன்றைய தினத்தில் 'களி' நைவேத்யம் செஞ்சு சிவனை வழிபாடு செய்வது , கல்யாண பாக்யமும், மாங்கல்யமும் அதாவது (தீர்க்க சுமங்கலித்துவம்) தரும் என்பது ஐதீகம்.

அதிகாலை எழுந்து குளித்து விட்டு , எல்லா நாள் போல அன்றும் சிவ நாமம் உச்சரித்து நமக்கு வேண்டும் வரம் கேப்பதும் மாலை நேரத்துல சிவாலய நடராஜரை தரிசிப்பது உயர்வான பலன் தரும் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அது போல மாங்கல்யம் பலம் தரக்கூடிய சக்தி வாய்ந்த விரத தினம்கறதால இந்த நாள்ல திருமாங்கல்யச் சரடை மாத்திக்கறது நல்லது. அப்புறம் முக்கியமான விஷயம், பூஜை முடிஞ்சதும் அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்கள், உறவுக்காரப் பெண்களுக்கு மங்களப் பொருட்களைத் தர்றதும், நமது மாங்கல்யபலம் கூடும் என்பதும் ஐதீகம் ( திருமாங்கல்யம் என்பது மெல்லிய வெள்ளை நூலில் திரித்து மஞ்சள் தடவி அதில் மஞ்சள் கிழங்கு கட்டி அதை பயன் படுத்தலாம் அவ்வாறு மஞ்சள் கிழங்கு கிடைக்காதவர்கள் அதில் நடுவில் ஒரு பூவை கட்டி கொள்ளலாம் )

அத்தோடு இல்லாமல் அன்றைய நாள் இனிப்பான களியை நைவேத்யம் செய்து பிரசாதமா அனைவருக்கும் தந்து நீங்களும் உண்பது திருமண பாக்யமும், தீர்க்க சுமங்கலித்துவமும் தந்து நமது வாழ்க்கையை உயர்வடைய வைக்கும். மிக முக்கியமான விஷயம்... இது, திருஞானசம்பந்தர் அவர்களாலே போற்றப்பட்ட விரதம் என்பது குறிப்பிட தக்க விசியம்.

என்றும் அன்புடன் சோதிடர்