Monday 20 May 2013

தேர்தல் ஆணையத்திடம் திறந்த கேள்விகள்:

தேர்தல் ஆணையத்திடம் திறந்த கேள்விகள்:

1. தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்ய வேண்டிய கண்கானிப்புகளையும் கடமைகளையும் நாடு முழுக்க ஏன் பொது மக்கள் மேற்கொண்டனர்?

2. தேர்தல் மையத்தைவிட்டு ஏன் நாடாளுமன்ற வாக்குப்பதிவு ஏடு தேர்தல் ஆணைய அதிகாரியால் வெளியே கொண்டு வரப்பட்டது? (காணொளி ஆதாரம்: http://www.youtube.com/watch?v=WrKt1YE-Tr0)

3.குறைந்தது 5 நாட்களாவது அழியாத மை எனச் சொல்லியும் ஏன் நீங்கள் இட்ட மை அடுத்த இரண்டு மணி நேரத்தில் அழிந்தது? இதற்கு ஆதாரம் மலேசிய குடிமக்களின் ஆங்காங்கே பதிவான புகார்கள்.

4.ஜொகூர் மாநிலத்தில் ஏன் வாக்குப்பதிவுகள் கொண்ட பெட்டி வாடகை காரில் இரவு 10மணிக்குத் திடிரென்று வாக்குக் கணக்கிடும் இடத்திற்கு வரவேண்டும்? (ஆதாரம்: காணொளி: http://www.youtube.com/watch?v=d34AT8srNlQ)

5. சரியாக 3.45க்கு ஏன் ஓட்டுப்பதிவுகள் கொண்ட தேர்தல் ஆணையத்தின் இரு மஞ்சள் சாக்குகள் பொது திடலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்? உடன் ஒரு தேர்தல் அதிகாரியும் போலிசும் இருப்பது குறிப்பிடத்தக்கது. (ஆதாரம்: காணொளி: http://www.youtube.com/watch?v=8SKnvjZZzsY)

6. ஓட்டுப் போடுவதற்கு முன்பே ஏன் விரலில் மையிட வேண்டும்? வயதானவர்கள் தடுமாறி மையை ஓட்டுத் தாளில் இழுப்புவதற்கு அதிக வாய்ப்புண்டு. அப்படி மை பட்ட ஓட்டுத் தாள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள வேளையில் ஓட்டுப் போட்டப் பிறகு மையை விரவில் இடும் சேவையை முன்னெடுத்திருக்கலாமே?

7.இரண்டாம் குடியுரிமை பெற்ற எந்த வெளிநாட்டு வேலையாட்களும் அந்த நாட்டின் அரசியலிலோ தேர்தலிலோ ஈடுப்பட முடியாத சட்டம் உண்டு. சிங்கப்பூரிலும் இது பின்பற்றப்படுகின்றது. அப்படியிருக்க எப்படி வங்காளதேசிகள் ஓட்டுச்சாவடிக்குள் பிரவேசிக்க முடிந்தது? அல்லது கொண்டு வரப்பட முடிந்தது? (ஆதாரம்: காணொளி: http://www.youtube.com/watch?v=RsyM_i87Ots)

8. Sk seri Manjung ஓட்டு மையத்திற்கு வெளியே BHK 2025 காரிலிருந்து ஓட்டுப்பதிய வந்த சிலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட நேரடி காணொளியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்த ஓட்டாளர்களைக் காரிடம் அழைத்து வரும் மலாய் பெண்மணியின் முகமும் பதிவாகியிருப்பதோடு அவர் தேசிய முன்னணி கூடாரத்திற்குள்ளிருந்து வெளியேறுகிறார் மேலும் அந்தக் கட்சியின் சின்னம் உள்ள சட்டையையும் அணிந்திருக்கிறார். அவரையும் அந்தக் காருக்குள் இருந்தவரையும் உடனே கைது செய்து விசாரிக்க முடியுமா? (ஆதாரம்:http://www.youtube.com/watch?v=lkdg21W1TYk)

9. ஓட்டுச்சாவடிகளில் சந்தேகத்திற்குரிய வங்காளதேசிகளைப் பெரும்பாலும் தடுத்து நிறுத்தி அவர்களைச் சோதனையிட்டு கேள்விக்குள்ளானவர்கள் சீனர்களாகத்தான் இருக்கிறார்கள். ஏன் அங்கு ஓட்டுப் பதிவு செய்யப்போன தமிழர்களின் கண்களுக்கு இந்த அநீதிகள் தெரியவில்லை, அவர்களுக்கு என்ன நேரந்தது என ஒரு சமூக ஆய்வை முன்னெடுக்க முடியுமா? (ஆதாரம்: http://www.youtube.com/watch?v=ntu8biBT78c)

10. 5 மே இரவு நேரத்தில், அதாவது ஓட்டுச் சாவடிகள் மூடப்பட்டு ஓட்டுப் பெட்டிகள் குறிப்பிட்ட கணக்கெடுக்கும் மையத்திற்குச் சென்று பல மணி நேரங்கள் ஆன வேளையில், திடிரென கார் எண் JPG1555- இன் மூலம் ஓட்டுப் பெட்டிகள் போலிஸ் பாதுகாப்புடன் ஏன் கொண்டு வரப்பட வேண்டும்? இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சில இடங்களில் 6மணிக்கெல்லாம் இரவாகிவிடும் என்று சொல்ல முற்பட்டால், மன்னிக்கவும். (ஆதாரம்: http://www.youtube.com/watch?v=j1njvXK_hqo)

11. மக்களால் சமூக இணையத்தலங்களில் வெளியிடப்பட்ட இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு மலேசியன் என்கிற முறையில் இதையெல்லாம் கேட்க எனக்கு உரிமை உண்டா? அதையும் நீங்களே சொல்லிவிடுங்கள். அப்படி இல்லையென்றால் இதையெல்லாம் கேட்க நமது நட்பு நாடான பங்களாடெஷிலிருந்து சிறப்பு குழுவையாவது அழைக்க ஏற்பாடு செய்யுங்கள். அதுவும் இல்லையென்றால் இந்தியாவிலிருந்து விஜயகாந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை அழைக்கவும். நன்றி.