Friday 28 June 2013

ஒவ்வொரு தமிழரும் அறிய வேண்டிய செய்தி.

ஒவ்வொரு தமிழரும் அறிய வேண்டிய செய்தி.

'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்'

ஒருவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் பிரஞ்சு மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.

அல்லது

அவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் இத்தாலி மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.

அல்லது

அவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் ஜெர்மனி மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.

அல்லது

அவன் வாழும் நாட்டில் அரசியல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், அலுவல், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் ஜப்பான் மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.

தாய்நாடு இல்லை என்றால் மாறாக அவர்கள் அந்த நாட்டில் பிழப்பு தேடி போனவர்களா இருக்க வேண்டும் அல்லது அடிமையாக குடியேற்றபட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது
ஆட்சி மாற்றத்தால் குடியேறிவர்களாக இருக்க வேண்டும்.

இந்தியா -- இந்தி
----------------------
இந்திய அரசியல் மொழியாக, அலுவல் மொழியாக, நாடாளுமன்ற மொழியாக, வழக்காடு மன்ற மொழியாக, இராணுவ
மொழியாக கோலச்சுவது இந்தி மொழி அனைத்திலும் இந்திய மொழியே கோலச்சுகிறது. இந்தி தெரியவில்லை என்றால் தேச விரோதிகாக சித்தரிக்கபடுகிறார்கள்.

இந்திய தேர்வுகளில் தமிழில் நடத்த அனுமதியில்லை
இந்திய நாடாளுமன்றத்தில் தமிழுக்கு அனுமதியில்லை
இந்திய தூதரகத்தில் தமிழுக்கு அனுமதியில்லை
இந்திய தேசிய வங்கிகளில் தமிழுக்கு அனுமதியில்லை
தமிழகத்தில் இருக்கும் இந்திய விமான நிலையம், தொடர்வண்டி நிலையம், இந்திய வருமான வரி அலுவலகம், இந்திய தேசிய வங்கி
என அதைத்து இந்திய துறையிலும் தமிழ் தெரியாத அரசு பணியாட்களை அமர்த்தி தமிழர்களிடையே குழப்பங்களை விழைவிக்கிறார்கள்.

****இந்தி தெரிந்தால்தான் காரியம் நடக்கும் என்ற நிலைக்கு தமிழ் மக்களை தள்ளுகிறார்கள்.****

தமிழர்கள் தமிழில் படித்தால் எதுக்கும் இலாய்க்கு இல்லை, உதவாது என்ற மன நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.

தமிழில் படித்தால் வாழ்கையே சூனியமாகிவிடும் என்று மக்கள் எண்ணுவது எந்த அடிப்படையில்?

இந்திய அரசு தமிழ் மொழியை புறம் தள்ளி இந்தியில் மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்கி அதை மட்டுமே வளர்க்க முயற்சி செய்து வருகிறது.

திரிந்து தோன்றிய மற்ற மொழி இனத்தவர்களுக்கு வேண்டுமானால் இந்தியை ஏற்றுகொள்வது ஏற்புடையதாக இருக்கலாம்.
ஆனால் காலத்தால் முன்தோன்றிய தமிழ் மொழிக்கு, தமிழர்களுக்கு இது ஏற்புடையதல்ல.

இந்தியா -- ஒரு துணைகண்டம்
----------------------------------------
இந்தியா என்பது ஆசியாபோல ஒரு துணைகண்டம்
இது ஒரு நாடல்ல என்பதை தமிழக மக்கள் நாம் உணர வேண்டும்
இந்தியா என்பது வெள்ளைகாரன் அவன் வசதிக்காக உருவாக்கியது
இந்தியாவெங்கும் ஆங்கிலத்தை திணித்து ஆங்கிலத்தை முதன்மையாக மொழியாக மாற்றினான்.

ஆங்கிலமொழியை கட்டயாமாக்கபட்டது, ஆங்கிலத்தில் படித்தாலே வேலை என்ற நிலைக்கு தள்ளினார்கள்.

பின்பு ஆட்சி அவர்களிடம் இருந்து கைமாறி வடநாட்டவர்களின் கையில் வந்தது, அவர்கள் அவர்களின் மொழியான இந்தியை திணித்தார்கள் கட்டயாமாக்கினார்கள், அதை எதிர்த்த நூற்றுகணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள், ஆயிரக்கணக்கான தமிழர்கள் காயமுற்றார்கள் மேலும் பல வன்முறை அரங்கேறியது.

பலகாலம் வெவ்வெறு ஆட்சியர்களால் ஆளபட்டதால் தமிழர்கள் தனக்கான நாடு வேண்டும் என்ற எண்ணத்தை ஏனோ மறந்தார்கள்.

இன்று தமிழ் இனம் நாடற்று இருப்பதால் நாம் பல உரிமையை இழந்தோம் நாதியற்று இருக்கிறோம். இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம். தேவை தமிழியம் ==> தமிழ் தேசியம்.