Monday 14 March 2016

ஏன் செவ்வாய் கிழமை முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு தெரியுமா?

ஏன் செவ்வாய் கிழமை முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு தெரியுமா?
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள். இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் பலரும் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்து கொண்டோ பலரும் வருவோம்.
இருப்பினும், பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்திற்கு பின்னால் நிச்சயம் ஏதேனும் ஓர் காரணம் இருக்கும். நம் முன்னோர்கள் எந்த ஒரு காரணம் இல்லாமலும், எதையும் பின்பற்றமாட்டார்கள். எனவே நம் முன்னோர்கள் சொல்வதை தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு அதைப் பின்பற்றுங்கள்.
துர்கை மற்றும் லட்சுமி தினம்
இப்பழத்திற்கு பின்னணியில் வேறு பல உண்மைகளும் உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.
செலவு கூடாது
செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய் கிழமை. இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதோடு, இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள்.
வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள்
எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
துரதிர்ஷ்டம்
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது, நகம் வெட்டுவது போன்ற செயல்கள் துரதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பிக்கை உள்ளது. இதற்கு காரணம் செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி, வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஜோதிடத்தின் படி…
இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது. ஒருசில லாஜிக்குகளைக் கொண்டு ஜோதிடர்கள் இதனைச் சொல்கின்றனராம். செவ்வாய் கிழமையில் செவ்வாய் குடிக்கொண்டிருக்கிறாராம். மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடுமாம்.
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்
மற்றொரு ஜோதிடர் கூறுவதாவது, முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.
ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்வடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்களாம். இதுப் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், நம் முன்னோர்கள் இதை நம்பி பின்பற்றி வருகின்றனர்.

Best regards,